தண்ணீர் இருக்கு.. டம்ளர் எங்கே.. மருத்துவமனையில் நோயாளிகள் அவதி

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உள்ள குடிநீர் இயந்திரங்களில் டம்ளர் இல்லாமல் நோயாளிகள் அவதியடைகின்றனர்.

ராமநாதபுரம் அருசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு தினமும் 2000 பேருக்கும் அதிகமான மக்கள் சிகிச்சை பெறுகின்றனர். நோயாளிகளின் வசதிக்காக புதிய கட்டடத்தின் ஒவ்வொரு பிரிவிலும் ஆர்.ஓ.,குடிநீர் வழங்கும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் எந்த ஒரு இயந்திரத்திலும் டம்ளர் வைக்காமல் உள்ளனர். இதனால் நோயாளிகள் தண்ணீர் இருந்தும் குடிக்க முடியாமல் அவதியடைகின்றனர். மேலும் சிலர் தாகத்தால் கையில் ஏந்தி குடிக்கின்றனர். இதனால் அதிகளவில் குடிநீர் வீணாகிறது. மருத்துவமனை நிர்வாகம் சார்பில் நோயாளிகளின் அடிப்படை தேவைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் வலியுறுத்தினர்.

Advertisement