உள்ளிருப்பு போராட்டம்

வாடிப்பட்டி:

வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலரை கண்டித்து துாய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். செயல் அலுவலர் ஆளவந்தான், மாதந்தோறும் 5ம் தேதி வழங்க வேண்டிய ஊதியத்தை 15ம் தேதி வரை காலம் தாழ்த்தி வழங்குவதாகவும், பணியாளர்களை தரக்குறைவாகவும், கடுமையான வார்த்தைகளால் திட்டுவதாகவும் கூறி பேரூராட்சி அலுவலகம் முன் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ஞானசுந்தரம், சேர்மன் பால்பாண்டியன், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். 'செயல் அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என உதவி இயக்குனர் கூறியதால் போராட்டத்தை கைவிட்டனர்.

Advertisement