தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை
சென்னை: வடகிழக்கு பருவமழை நேற்று தமிழகத்தில் துவங்கியது. முதல்நாளே பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இரண்டாவது நாளாக இன்றும்( அக்டோபர் 16) மழை தொடர்கிறது.
சென்னையில் கிண்டி ஈக்காட்டுதாங்கல் ஆலந்தூர் வேளச்சேரி, கோட்டூர்புரம், பல்லாவரம், மீனம்பாக்கம்,பம்மல், அனகாபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதையை மாநகராட்சி கமிஷனர் சமீரன் ஆய்வு செய்தார்.
விழுப்புரத்தில் அரசூர், ஜானகிபுரம், கோலியனூரிலும்
திருச்சியில் முசிறி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும்
கரூரின் குளித்தலை அய்யர்மலை இரும்பூதிப்பட்டி பகுதியிலும் மழை பெய்தது.
மின்னல் தாக்கி ஒருவர் பலி
திருவண்ணாமலை செய்யாறு அருகே நெல்வாய் கிராமத்தில் மின்னல் தாக்கியதில் கார்த்திகேயன்(55) உயிரிழந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement