கொளத்தூர் தவெக எம்எல்ஏ விரைவில் வீடு திரும்புவார்; அமைச்சர் அருண்ராஜ் தகவல்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு செய்தார்.
அவரது பேட்டி; நீதிமன்றத்தில் உள்ள தடையாணை காரணமாக செவிலியர் உதவியாளர் காலி பணியிடங்களுக்கான பணி நியமன ஆணை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சட்டரீதியாக அந்த பிரச்னை சரி செய்யப்பட்டு வருகிறது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது. குமரி மாவட்டத்தில் மருத்துவக் கழிவுகள் மறுசுழற்சிக்கு அனுப்பப்படாமல் வளாகத்திற்குள்ளே குழி தோண்டி புதைக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ., பாபு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலையில் நாளுக்கு நாள் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அவர் விரைவில் நலமுடன் வீடு திரும்புவார்.
தற்காலிகச் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யும் கோரிக்கையின் படி, முதற்கட்டமாக 2500 செவிலியர்களை நிரந்தரம் செய்வதற்கான அரசாணை இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் வெளியிடப்படும்.
இவ்வாறு அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.
மேலும்
-
கணவரை காணவில்லை மனைவி போலீசில் புகார்
-
‘ட்ரோன்’களை வீழ்த்த நவீன துப்பாக்கிகள் வாங்குகிறது போலீஸ்
-
அமைச்சர் குறித்து அவதுாறு செய்தி யூ டியூபருக்கு தடை
-
சேதுக்கரைக்கு சரக்கு லாரிகளில் பயணம் செய்யும் கிராம மக்கள்: கண்டுகொள்ளாத போலீசார்
-
குடிநீர் விநியோகம் பாதிப்பு பொதுமக்கள் போராட்டம்
-
ஆர்டிக்கல்...உலகத்தரம் வாய்ந்த கல்வி வழங்குவதில் வள்ளி விலாஸ் ஆலயா பள்ளி முதன்மை