அஞ்சல் தின விழா
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த பாக்கம் அஞ்சல் நிலையத்தில் உலக அஞ்சல் தின விழா கொண்டாடப்பட்டது.
சங்கராபுரம் வள்ளலார் பள்ளி, இன்னர்வீல் கிளப் இணைந்து பாக்கம் கிளை அஞ்சலகத்தில் நடந்த விழாவிற்கு, வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். வள்ளலார் மன்ற செயலாளர் ராதாகிருஷ்ணன், குறிஞ்சி தமிழ்ச் சங்க செயலாளர் சக்திவேல் இன்னர்வில் முன்னாள் தலைவி அகல்யா ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். போஸ்ட்மாஸ்டர் ரமேஷ்பாபு வரவேற்றார்.
இன்னர்வில் கிளப் தலைவி கீதா முருகன், செயலாளர் பார்கவி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
போஸ்ட் மாஸ்டர்கள் கோவிந்தராஜன், சரண்யா, போஸ்ட்மேன் மண்ணாங்க்டி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
இன்னர்வீல் முன்னாள் தலைவி தீபா சுகுமார், ஆசிரியர் லட்சுமிபதி ஆகியோர் சேமிப்பின் அவசியம் பற்றியும், அஞ்சலகம் முலம் மாணவர்கள் சேமிக்கும் வழிமுறைகள், மற்றும் அங்சல்துறையில் சேவைகளை பாராட்டி பேசினர்.
நிகழ்ச்சியில் வள்ளலார் பள்ளி மாணவர்கள் 50 பேர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். அண்ணாதுரை நன்றி கூறினார்.
மேலும்
-
சென்னைக்கு இன்றும் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்; அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் உத்தரவு
-
சென்னைவாசிகளே நோட் பண்ணிக்கோங்க; மழைக்கால புகார்கள் தெரிவிக்க மொபைல் எண்கள் அறிவிப்பு
-
மத்திய பிரதேசத்தில் சோகம்; லாரி மோதியதில் பக்தர்கள் 12 பேர் பலி
-
போயும் போயும் இப்படியா சாவது: ஏதாவது செய்ய நினைத்தேன்: இந்திய விமானி ஸ்மிட் மச்சார் பேட்டி
-
கல்வியுடன் வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை:கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் தகவல்
-
வடமாநிலத்தவர் துர்கா பூஜை கொண்டாட்டம்