ஆர்டிக்கல்...மக்களின் நன்மதிப்பு பெற்ற கடலுார் வழக்கறிஞர் சிவமணி
கடலுார் சீத்தாராம் நகரில் வசிக்கும் மூத்த வழக்கறிஞர் சிவமணி, பொதுமக்களின் சேவையின் மூலம் சமூக அமைப்புகளின் விருதுகளைப் பெற்று பலரின் பாராட்டு பெற்றுள்ளார். குறிஞ்சிப்பாடி அடுத்த தம்பிபேட்டை ஊராட்சி முன்னாள் தலைவரான இவர், வழக்கறிஞர் பணி மூலம் மக்கள் பணியை துவங்கி, இவரது கடினமான உழைப்பால் மக்களின் நம்பிக்கையையும், பேராதரவையும் பெற்று வருகிறார். புதுச்சேரி, விழுப்புரம், கடலுார் மாவட்டங்களில் நடந்த சாலை விபத்துக்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு தொகையை அதிக அளவில் பெற்று தருவதில் முதன்மை பெற்று வருகிறார்.
விபத்தில் இறந்த நெய்வேலியை சேர்ந்த என்.எல்.சி., ஊழியர் ஒருவர் குடும்பத்திற்கு, வழக்கறிஞர் சிவமணியின் முயற்சியால் மக்கள் நீதிமன்றம் மூலம் 1.80 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க தீ்ர்வு காணப்பட்டது. இதே போன்று, அதிகளவில் விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காலதாமதம் இல்லாமல் உரிய தொகையை பெற்று வந்து, பொதுமக்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகின்றார். இவரது ஜூனியர் வழக்கறிஞர்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோரும், இவருக்கு உறுதுணையாக இருந்து பல்வேறு சிறப்பான பணிகளை திறம்படச் செய்து வருகின்றனர். இதனால் மக்களின் நன்மதிப்பையும், பேராதரவையும் பெற்று வருகின்றனர். வழக்கறிஞர் சிவமணி ரோட்டரி சங்கத்தில் தன்னை இணைத்து பல்வேறு சமூக சேவை பணிகள், பள்ளி, கல்லுாரி, கோவில்கள் என அனைத்திற்கும் சேவை செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார். இவர், கடலுார் மாவட்ட முன்னாள் காவலர் சங்கம் சார்பில் நடந்த பாராட்டு விழாவில் கவுரவிக்கப்பட்டார்.
மேலும்
-
தொடரும் போராட்டம்; வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை: பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் கண்டிப்பு
-
நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்: ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்
-
நெதன்யாகுவுக்கு டிரம்ப் ஆதரவு: நன்றி தெரிவித்த இஸ்ரேல் பிரதமர்
-
லாரி மோதி முதியவர் பலி
-
மைல் கல்லுக்கு ஆயுத பூஜை
-
பில் இல்லாமல் பொருட்கள் விற்பனை அரசுக்கு வரி இழப்பு ஏற்படுவதாக மனு