குடிநீர் விநியோகம் பாதிப்பு பொதுமக்கள் போராட்டம்

கடலுார்: கடலுார் முதுநகரில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் ஒன்று திரண்டதால் பரபரப்பு நிலவியது. கடலுார், முதுநகர் பனங்காட்டு காலனி நகர்ப்புற மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு, பொதுப்பயன்பாட்டுக்கான மின் கட்டணம் ரூ.3.36 லட்சம் நிலுவையில் இருப்பதாக கூறி மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்தனர்.

இதனால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டதை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று மாலை குடியிருப்பு வளாகத்தில் காலி குடங்களுடன் திரண்டு கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது. முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததை தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement