கணவரை காணவில்லை மனைவி போலீசில் புகார்

1

பண்ருட்டி: கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

சென்னை, புதுபெருங்களத்துார் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவபிரகாசம்,51; தனியார் நிறுவன அக்கவுண்டண்ட்; இவர், கடந்த 14ம் தேதி, பண்ருட்டி, போலீஸ் லைன் தெருவில் உள்ள தனது தாய், சாரதாவை பாரத்துவிட்டு, சென்னைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் சென்னை வீட்டிற்கு செல்லவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவரது மனைவி பத்மாவதி அளித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement