குளவிகள் கொட்டியதில் 36 தொழிலாளர்கள் காயம்

சத்திரப்பட்டி: பழநி அருகே குளவிகள் கொட்டியதில் 36 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.

பழநி சத்திரப்பட்டி அருகே கோம்பைபட்டி கிராமத்தில் 125 நாள் வேலை திட்ட பணிக்கு 104 தொழிலாளர்கள் சென்றனர். பெரியதுரையான் கோயில் அருகே ஓடையில் பணியில் இருந்த போது அங்கிருந்து திடீரென கிளம்பிய குளவிகள் தொழிலாளர்களை விரட்டி விரட்டி கொட்டின. இதனால் காயம் அடைந்த 4 ஆண்கள் உட்பட 36 பேர் சிகிச்சைக்காக பழநி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் 13 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

Advertisement