விதிமீறல் புகாரில் 6 சாயப்பட்டறைகளுக்கு ‘சீல்’
சின்னாளபட்டி: அம்பாத்துறை அருகே விதிமீறலில் ஈடுபட்ட 6 சாயப்பட்டறைகளுக்கு கலெக்டர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சின்னாளபட்டி பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான சாயப்பட்டறை நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. மாசுக் கட்டுப்பாடு பிரச்னைகள் எதிரொலியாக பல நிறுவனங்கள் மூடப்பட்டன. சில நிறுவனங்கள் சுற்றுப்புற கிராமங்களுக்கு இடம் பெயர்ந்தன.
சில மாதங்களாக சின்னாளபட்டி பேரூராட்சி, அம்பாத்துறை, காந்திகிராமம் ஊராட்சி பகுதியில் உள்ள சில சாயப்பட்டறைகள் உரிய அனுமதியின்றி விதிமீறல்களுடன் செயல்பட்டு வருகின்றன. புகார் எழுந்தபோதும் வருவாய், போலீஸ், மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் காட்டி வந்தனர்.
சில இடங்களில் ஜெனரேட்டர் கொண்டு இரவு நேரங்களில் சாயப்பட்டறை நிறுவனங்கள் இயங்குவதாகவும், கழிவுநீர் முறையாக சுத்திகரிக்காமல் திறந்தவெளியில் தேங்கியுள்ளதாகவும் புகார் நீடிக்கிறது.
இந்நிலையில் செப்.,24ல் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தொடர் புகார்கள் அடிப்படையில் அம்பாத்துறை, ராமநாதபுரம் பகுதியில் உள்ள 13 விதிமீறல் சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டித்து சீல் வைக்க முடிவு செய்தனர்.
கலெக்டர் உத்தரவின்பேரில் நேற்று ஆத்துார் தாசில்தார் சுரேஷ்குமார், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர்கள் தங்கரதி, தாரணி தலைமையிலான குழுவினர் ராமநாதபுரம் பகுதியில் ஆய்வு செய்தனர். இதில் 6 பட்டறைகளுக்கு சீல் வைத்தனர். எஞ்சிய இடங்களில் மின் இணைப்பு துண்டித்தபின் நடவடிக்கை எடுப்பதாக கூறிவிட்டு சென்றனர். அம்பாத்துறை வி.ஏ.ஓ., ஜெயலட்சுமி, ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் உடன் இருந்தனர்.
கலெக்டர் உத்தரவில் 13 பட்டறைகள் இடம் பெற்றிருந்தபோதும் நேற்று 6 பட்டறைகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும்
-
மழைநீர் வாய்க்காலை துார்வார கோரிக்கை
-
லாட்ஜ் ஊழியரை கொன்று புதைத்த சித்துார் பெண் உட்பட மூவர் கைது
-
நகை மோசடியில் கூட்டுறவு சங்க செயலருக்கு உடந்தையாக செயல்பட்ட பெண் உட்பட 4 பேர் கைது
-
முதல்வர் வருகையால் நீடித்த வாகன நெரிசல்
-
‘தினமலர்’ வித்யாரம்பம் நிகழ்ச்சி விருதையில் வரும் 20ல் நடக்கிறது
-
மக்கள் தொகை கணக்கெடுப்பில்