மழைநீர் வாய்க்காலை துார்வார கோரிக்கை
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் நகராட்சியில் உள்ள வாய்க்கால்களை துார்வாரி மழைநீர் தடையின்றி செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்நகராட்சியில் உள்ள வாய்க்கால்களில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக கொட்டப்படுவதால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்குகிறது. இவற்றில் இருந்து கொசுக்கள் அதிகமாக உற்பத்தி ஆகின்றன. அப்பகுதியில் சுகாதாரம் பாதிப்படைந்து காய்ச்சல், தொற்றுநோய்கள் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரோட்டின் ஓரமுள்ள வாய்க்கால்கள் புதர் மண்டி, பராமரிப்பின்றி இருப்பதால் மழைநீர் வாய்க்காலுக்கு செல்லாமல் வழியிலேயே தேங்கி விடுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. தேங்கும் கழிவுநீரில் இருந்து வரும் துர்நாற்றம், நோய்கள் பரவ காரணமாகின்றன.
வாய்க்கால்களை துார்வாரி மழைநீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவமழை காலம் தொடங்கும் முன் இப்பணியை விரைந்து மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.
மேலும்
-
போக்சோ வழக்கில் வாலிபர் கைது
-
'குடும்பத்தின் ஆதரவு இல்லையெனில் சாதித்திருக்க முடியாது!
-
விதிமீறல் புகாரில் 6 சாயப்பட்டறைகளுக்கு ‘சீல்’
-
லாட்ஜ் ஊழியரை கொன்று புதைத்த சித்துார் பெண் உட்பட மூவர் கைது
-
நகை மோசடியில் கூட்டுறவு சங்க செயலருக்கு உடந்தையாக செயல்பட்ட பெண் உட்பட 4 பேர் கைது
-
முதல்வர் வருகையால் நீடித்த வாகன நெரிசல்