செஞ்சி அருகே சிறுமி மாயமான செய்தியில் சேர்ப்பு...
செஞ்சி அருகே சிறுமி மாயமான விவகாரத்தில் திடீர் திருப்பமாக தஞ்சாவூரை சேர்ந்த சாமியார் சரவணன் மற்றும் அவரது மனைவியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செஞ்சி அருகே ஆலம்பூண்டியில் 7 வயது சிறுமி ஹேமலதா காணாமல் போன சம்பவத்தில், சிறுமியின் வீட்டருகே உள்ள சிவன் கோவிலில் தங்கி இருந்த தஞ்சாவூரைச் சேர்ந்த சரவணன் என்கிற சாமியார் திடீரென காணாமல் போனதால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் வந்துள்ளது.
இதையடுத்து அவரது மொபைல் எண்ணை ட்ரேஸ் செய்த போலீசார் நேற்று மாலை 6:00 மணியளவில் சரவணன் விழுப்புரம் அடுத்த அரசூர் பகுதியில் இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து சரவணன், அவரது மனைவியை பிடித்து விசாரனைக்காக இரவு 8.30 மணியளவில் சத்தியமங்கலம் காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர்.
அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement