முதல்வர் வருகையால் நீடித்த வாகன நெரிசல்

கோவை: கோவை விமான நிலையத்திலிருந்து நேற்று காலை 11 மணிக்கு முதல்வரின் கான்வாய் புறப்பட்டது.அவிநாசிரோடு, எல்.ஐ.சி.,சிக்னல் ஜெயில் ரோடு, பார்க்கேட் நஞ்சப்பா ரோடு வழியாக பெரியார் அறிவுலகத்தை முதல்வர் வாகனம் 11:58மணிக்கு அடைந்தது.

விழா முடிந்ததும் மதியம் 2:45 க்கு முதல்வர் வாகனம் புறப்பட்டு ஜி.டி.நாயுடு மேம்பாலம் வழியாக விமானநிலையத்தை அடைந்தார்.

முதல்வர் வருகைக்காக காந்திபுரம் நஞ்சப்பா ரோடு, மத்திய பஸ்ஸ்டாண்ட், பார்க்கேட், ஜெயில்ரோடு, அவிநாசிரோட்டின்இரு பகுதிகளிலும் மக்கள் ரோட்டுக்கு வராமல் இருக்க இரும்பு தடுப்பு அமைத்திருந்தனர்.

மற்ற ரோடுகளிலிருந்து வாகனங்கள் நுழையாமல் இருக்க இரும்பு தடுப்பும் வைக்கப்பட்டது. இதனால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

கிராஸ்கட்ரோடு எண் 1 முதல் 9 வரையும், ராம்நகரிலுள்ளகாளிங்கராயன், விவேகானந்தா, சரோஜினிநாயுடு ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியவில்லை.

வடகோவை,மேட்டுப்பாளையம் ரோடு பவர்ஹவுஸ், டாடாபாத், சத்திரோடு ஜி.பி.சிக்னல், சித்தாபுதுார் சின்னசாமிநாயுடு, வி.கே.மேனன், பாரதியார், டாக்டர் பாலசுந்தரம் ரோட்டில் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது.

அவிநாசிரோடு உப்பிலிபாளையம், கலெக்டர் அலுவலகம், கோர்ட், ஹூசூர்ரோடு, அரசு கலைகல்லுாரி ரோடு, ரேஸ்கோர்ஸ், வெஸ்ட்கிளப் ரோடு, திருச்சிரோடு, அரசுமருத்துவமனை, லங்காகார்னர், ரயில்வே ஸ்டேஷன், டவுன்ஹால், ராஜவீதி, ஒப்பணக்காரவீதியில் நெரிசலில் வாகனங்கள் ஊர்ந்து சென்றது. மக்கள்நெரிசலில் சிக்கினர்.

Advertisement