30.8 கிலோ கஞ்சா பதுக்கிய இருவர் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட் டம், காவேரிப்பட்டணம் சுற்று வட்டார பகுதிகளில், சிலர் கஞ்சாவை பதுக்கி விற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார், அவர்களை கடந்த சில தினங்களாக கண்காணித்து வந்தனர். சம்பந்தப்பட்ட நபர்கள் கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணை, காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரிக்கு அடிக்கடி டூவீலர்களில் சென்று வருவது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.காவேரிப்பட்டணம் அடுத்த காவாப்பட்டியை சேர்ந்த ராஜ்குமார், 32, என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தபோது, வட மாநிலங்களில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, மூட்டைகளில் பதுக்கி சுற்று வட்டார பகுதிகளில் விற்றதை ஒப்புக்கொண்டார். இவர், துவாரகாபுரி செல்வ ராஜ், 19, காவேரிப்பட்ட ணம் நந்தகுமார், 25, ஆகியோருடன் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும், செல்வராஜ் இதற்காக, தான் வேலை பார்த்து வந்த தனியார் நிறுவனத்தில் இருந்து விலகியதும் தெரிந்தது. ராஜ்குமார், செல்வராஜ் இருவரையும் கைது செய்த காவேரிப்பட்டணம் போலீ சார், 30.8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள நந்தகுமாரை தேடி வருகின்றனர்.
மேலும்
-
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் ; அமைச்சர் அருண்ராஜ்
-
சவூதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்களே கவனம்; புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டது தூதரகம்
-
உண்டியல் பணத்தை வாங்கிப்போடுவது மட்டுமே அறநிலையத்துறையின் வேலையாக உள்ளது; அண்ணாமலை
-
திருப்பூர் ரயில் நிலையம்: ஒரே நாளில் 27 ஆயிரம் பேர்
-
பழச்சந்தையில் திடீர் மின் தடை ரூ.2 கோடி வியாபாரம் பாதிப்பு
-
மின் தடையை கண்டித்து புதுவண்ணையில் மறியல்