ஐ.டி.ஐ.,யில் நுகர்வோர் விழிப்புணர்வு
கிருஷ்ணகிரி: பர்கூர் அரசு ஐ.டி.ஐ.,யில் உலக உணவு தினம் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கல்லுாரி முதல்வர் முருகன் தலைமை வகித்தார். பேராசிரியர் அருள்குமார் வரவேற்றார். பேராசிரியர் இளங்கோ முன்னிலை வகித்தார். சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளரும், குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளருமான சந்திரமோகன் பேசியதாவது:உலக உணவு நாள் கொண்டாடப்படுவதன் நோக்கமே, உணவுகளை மக்கள் வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும். ஏழை எளியவர்களுக்கு உணவுகளை வழங்கிட வேண்டும். கலப்படமற்ற உணவுகளை உண்ண வேண்டும். சிறு தானிய உணவுகளை தினமும் சாப்பிட வேண்டும். உணவு பொருட்கள் வாங்கும் போது கட்டாயமாக பற்று சீட்டு வாங்க வேண்டும் மேலும் கிராம பகுதிகளில் சாலை, மின்சாரம், குடிநீர் வசதி ஆகியவை மக்களுக்கு சிறப்பாக அமைய வேண்டும். இதில் ஏதாவது குறைபாடு இருந்தால், உயர் அலுவலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. கல்லாரி பேராசிரியர்கள் சந்தோஷ், பிரான்சி சேவியர் மற்றும் நுகர்வோர் சங்க நிர்வாகிகள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் ; அமைச்சர் அருண்ராஜ்
-
சவூதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்களே கவனம்; புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டது தூதரகம்
-
உண்டியல் பணத்தை வாங்கிப்போடுவது மட்டுமே அறநிலையத்துறையின் வேலையாக உள்ளது; அண்ணாமலை
-
திருப்பூர் ரயில் நிலையம்: ஒரே நாளில் 27 ஆயிரம் பேர்
-
பழச்சந்தையில் திடீர் மின் தடை ரூ.2 கோடி வியாபாரம் பாதிப்பு
-
மின் தடையை கண்டித்து புதுவண்ணையில் மறியல்