தொடர் விடுமுறையால் எகிறியது விமான கட்டணம்

6

சென்னை: ஆயுத பூஜை தொடர் விடுமுறையால், விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளதால் பயணியர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நாடு முழுதும், வரும் 19ல் ஆயுத பூஜை, 20ல் விஜயதசமி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. வார விடுமுறையும் சேர்ந்து வருவதால், நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தளங்களுக்கும் பலர் படையெடுக்கின்றனர்.

Tamil News
Tamil News

இதனால், சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ரயில்கள், பஸ்கள் அனைத்திலும் கூட்டம் அலைமோதுகிறது. விமானங்களில் பலர் பயணம் மேற்கொள்வதால், சென்னையில் இருந்து துாத்துக்குடி, கோவை, சேலம், திருவனந்தபுரம், கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத், விஜயவாடா, மும்பை, டில்லி, கொல்கட்டா உள்ளிட்ட விமானங்களில், டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன.

Advertisement