சிறுமியை கர்ப்பமாக்கி திருமணம்: வாலிபர் உட்பட இருவருக்கு வலை

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே 17 வயது சிறுமியை காதலித்து கர்பமாக்கி திருமணம் செய்து கொண்ட வாலிபர் உள்ளிட்ட இருவரை போலீசார் தேடிவருகின்றனர்.

கடலுார் மாவட்டம், சே்ததியாத்தோப்பு அடுத்த சென்னிநத்தம் கிராமத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் கிருஷ்ணன்,20: மினி டெம்போ டிரைவர். இவரும், சேத்தியாத்தோப்பு ஜவுளி கடையில் வேலை செய்து வந்த 17 வயது சிறுமியும் காதலித்து வந்தனர்.

கடந்த ஜனவரி 20ம் தேதி வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம், கிருஷ்ணன் திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். அதில் சிறுமி கர்ப்பமானார்.

அதனை அறிந்த சிறுமியின் தாய், சிறுமியை கடந்த ஜூலை 5ம் தேதி கிருஷ்ணனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

இந்நிலையில் ஒன்பது மாத கர்பமாக இருந்த சிறுமி, 2 நாட்களுக்கு முன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணன் மற்றும் சிறுமியின் தாய் ஆகியோர் மீது குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement