தீப்பிடித்து எரிந்த கார்: விழுப்புரத்தில் பரபரப்பு
விழுப்புரம்: சர்வீஸ் கடையில் நிறுத்தியிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் அருகே காங்கேயனுார் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் மகன் சவுந்தரராஜன்,25; இவரின் கார் பழுதடைந்ததால் சர்வீஸ் செய்ய அக்., 16 , விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் உள்ள கடையில் நிறுத்தி வைத்துள்ளார்.
இந்த நிலையில், அக்.,17 காலை 6:15 மணிக்கு, கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த விழுப்புரம் தீயணைப்பு துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து அரை மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. அந்த காருக்கு அருகே நிறுத்தியிருந்த மேலும், 2 கார்கள் லேசாக சேதமாகின.
இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் ; அமைச்சர் அருண்ராஜ்
-
சவூதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்களே கவனம்; புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டது தூதரகம்
-
உண்டியல் பணத்தை வாங்கிப்போடுவது மட்டுமே அறநிலையத்துறையின் வேலையாக உள்ளது; அண்ணாமலை
-
திருப்பூர் ரயில் நிலையம்: ஒரே நாளில் 27 ஆயிரம் பேர்
-
பழச்சந்தையில் திடீர் மின் தடை ரூ.2 கோடி வியாபாரம் பாதிப்பு
-
மின் தடையை கண்டித்து புதுவண்ணையில் மறியல்
Advertisement
Advertisement