குற்றம் சுமத்தப்பட்ட ஊழியருக்கு பதவி உயர்வு வழங்க பரிந்துரைப்பதா டி.ஆர்.ரமேஷ் கேள்வி
சென்னை: ‘‘திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், குற்றம் சுமத்தப்பட்ட ஊழியர் மீது எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல், அவருக்கு பதவி உயர்வு வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும்,’’ என, ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.ரமேஷ் வலியுறுத்தினார்.
அவர் கூறியதாவது:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ஐந்தாம் பிரகாரம் பழுது பார்த்தல், நகரும் தடுப்புகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. இந்த ஒப்பந்த பணிகள், ‘அஸ்வினி கன்ஸ்ட்ரக் ஷன்’ என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து, கடந்த ஜூன் மாதம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ், சில தகவல்கள் கோரி விண்ணப்பித்தேன். ஆனால், இதுவரை வழங்கப்படவில்லை. இதுகுறித்து, அறநிலையத்துறை இணை ஆணையரிடம் நேரடியாக புகார் கொடுத்ததற்கு, இரண்டு வாரங்களில் தர ஏற்பாடு செய்வதாக கூறினார்; ஆனாலும் வழங்கவில்லை.
இந்நிலையில், குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள குறிப்பிட்ட பெண் அதிகாரிக்கு, கணக்காளர் பதவியில் இருந்து, மக்கள் தொடர்பு அதிகாரி பணிக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. அவர் மீது குற்றம் இல்லையெனில், தகவல் தர மறுப்பது ஏன்?
அதேபோல, அவர் மீது எந்த ஒரு விசாரணையும் மேற்கொள்ளாமல், அவருக்கு பதவி உயர்வு வழங்குவது எந்த விதத்தில் நியாயம்; அறநிலையத் துறையின் வெளிப்படையான நிர்வாக நடவடிக்கை என்பது இதுதானா?
இதற்கு, தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். அந்த பெண் அதிகாரி மீது விசாரணை நடத்தாமல், அவருக்கு பதவி உயர்வு வழங்கக்கூடாது. இதுதொடர்பாக, அறநிலையத் துறை செயலர் மற்றும் கமிஷனருக்கு புகார் மனு அளித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் ; அமைச்சர் அருண்ராஜ்
-
சவூதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்களே கவனம்; புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டது தூதரகம்
-
உண்டியல் பணத்தை வாங்கிப்போடுவது மட்டுமே அறநிலையத்துறையின் வேலையாக உள்ளது; அண்ணாமலை
-
திருப்பூர் ரயில் நிலையம்: ஒரே நாளில் 27 ஆயிரம் பேர்
-
பழச்சந்தையில் திடீர் மின் தடை ரூ.2 கோடி வியாபாரம் பாதிப்பு
-
மின் தடையை கண்டித்து புதுவண்ணையில் மறியல்