கதவு திறந்து கிடந்த வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை
நாகர்கோவில்: கன்னியாகுமரி அருகே அதிகாலையில் திறந்து கிடந்த வீட்டின் முன் பக்க கதவு வழியாக சென்ற திருடன் 60 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றார்.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே குறும்பமை தோமையார் தெருவை சேர்ந்தவர் வினிஷ் 38. தனியார் ஐ.டி. நிறுவன ஊழியர். வீட்டில் இருந்தபடியே இரவு நேர பணி செய்வது வழக்கம். மனைவி வின்சி 33. அடிக்கடி டீ குடிப்பதாக வீட்டுக்கு வெளியே உள்ள படிக்கட்டு வழியாக கணவர் வருவார் என்பதால் வின்சி முன்பக்க கதவை பூட்டாமல் குழந்தைகளுடன் துாங்குவாராம்.
நேற்று அதிகாலை 3:00 மணியளவில் காலில் உள்ள கொலுசை யாரோ இழுப்பது போல் இருந்ததை வின்சி உணர்ந்தார். கணவராக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த போது சில வினாடிகளில் பீரோவில் இருந்து பொருட்கள் கீழே விழும் சத்தம் கேட்டது. லைட் போடுவதற்காக எழுந்த போது இருளில் ஒருவர் நிற்பதை பார்த்தார். அப்போது ஒருவர் கையில் ஒரு பேக்குடன் வெளியே ஓடினார். அலறிய வின்சி லைட்டை போட்ட போது படுக்கை அறை பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. உள்ளே இருந்த 60 பவுன் தங்க நகைகள் மாயமாகியிருந்தது. அக்கம்பக்கம் உள்ளவர்கள் அப்பகுதி முழுதும் தேடியும் திருடனை கண்டுபிடிக்க முடியவில்லை. முன்பக்க கதவு எப்போதும் திறந்திருக்கும் என்பதை தெரிந்த நபர் தான் இக்கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகித்த கருங்கல் போலீசார் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
நிறுவன அறிவிப்புகள்
-
தினம் ஒரு பங்கு
-
காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆகம விதிகளுக்கு முரணாக இருந்த படிக்கட்டுகள் அகற்றம்
-
சிறந்த முறையில் பயிற்சியளிக்கும் ஓம்சக்தி டிரைவிங் ஸ்கூல்
-
கைகளில் மரக்கன்று, சிலம்பம் சுற்றி சுற்றுச்சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு
-
அரூர் கால்நடை மருத்துவமனையுடன் செல்லம்பட்டி பஞ்.,ஐ இணைக்கணும்