அரூர் கால்நடை மருத்துவமனையுடன் செல்லம்பட்டி பஞ்.,ஐ இணைக்கணும்
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த செல்லம்பட்டி பஞ்.,ல் சங்கிலிவாடி, கீழானுார், செல்லம்பட்டி, கோணம்பட்டி, செல்லம்பட்டி புதுார், கொத்தனாம்பட்டி, வாலெடுப்பு ஆகிய கிராமங்கள் உள்ளன.
இப்பகுதியில் கால்நடை வளர்ப்போர் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு கருவூட்டுதல், கோமாரி தடுப்பூசி போடுதல் மற்றும் பல்வேறு சிகிச்சைகளுக்காக தீர்த்தமலையில் உள்ள அரசு கால்நடை கிளை மருந்தகத்திற்கு கால்நடைகளை அழைத்துச் சென்றனர். இந்நிலையில் கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு முன், செல்லம்பட்டி பஞ்., வடுகப்பட்டியில் உள்ள கால்நடை கிளை மருந்தகத்துடன் இணைக்கப்பட்டது. இதனால், தாங்கள் அவதிப்படுவதாக கால்நடை வளர்ப்போர் புகார் கூறுகின்றனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: செல்லம்பட்டியில் இருந்து வடுகப்பட்டி கால்நடை கிளை மருந்தகத்திற்கு, 7 கி.மீ., துாரம் செல்ல வேண்டும். இதனால் கால்நடைகளுடன் செல்லும் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். செல்லம்பட்டியில் இருந்து, அரூருக்கு, 5 கி.மீ., துாரம்தான். எனவே, அரூர் அரசு கால்நடை மருத்துவமனையுடன் செல்லம்பட்டி பஞ்.,ஐ இணைக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மேலும்
-
கல்வி, தொழில் வளர்ச்சியில் மேன்மையுற்று வெற்றி தமிழகத்தை படைப்போம்; முதல்வர் விஜய் உறுதி
-
கையில் கட்டுடனும், மார்பில் காயங்களுடன் ஹிந்தி நடிகர் டைகர் ஷெராப் புகைப்படம்; குற்றவாளிகளுக்கு போலீசார் வலை
-
சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை; பாதிரியார் கைது
-
பாகிஸ்தானில் தொடரும் பயங்கரவாதிகளின் மர்ம மரணம்; 4வது மாடியில் இருந்து விழுந்து லஷ்கர் பயங்கரவாதி பலி
-
தொடரும் போராட்டம்; வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை: பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கண்டிப்பு
-
நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்: ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்