சிறந்த முறையில் பயிற்சியளிக்கும் ஓம்சக்தி டிரைவிங் ஸ்கூல்

தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்தில், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுனர்களை உருவாக்கி, வெள்ளி விழாவை நோக்கி நடைபோடும் ஒரே நிறுவனம், ஓம்சக்தி டிரைவிங் ஸ்கூல். அரூர், தர்மபுரி, கரூரில் கிளைகள் உண்டு.

இங்கு பயிற்சி பெற்ற பெண்கள், அரசு துறைகளில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிறுவனம் செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் அசோசியேசனின், அரூர் முதலுதவி பயிற்சி மையமாக செயல்பட்டு, இங்குள்ள பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு முதலுதவி பயிற்சி முகாம்களை நடத்தி, சான்றிதழ்களை பெற்று தருகிறது. சிறந்த முதலுதவி பயிற்சி மையத்திற்கான கவர்னர் விருதை, தொடர்ந்து, 15 ஆண்டுகளாக பெற்றுள்ளது. ஓட்டுனர் உரிமம், நடத்துனர் உரிமம், முதலுதவி சான்று மற்றும் படிக்காதவர்களும் டூவீலர், பேட்ஜ், ஹெவி லைசன்ஸ் பெற, இந்நிறுவனத்தை அணுகலாம் என, இதன் தாளாளர் பாண்டுரங்கன் தெரிவித்துள்ளார். பொதுமக்களின் வேண்டுகோளின் படி, கம்பைநல்லுார் ஜி.ஹெச்., அருகே இதன் கிளை இயங்கி வருகிறது.

Advertisement