காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆகம விதிகளுக்கு முரணாக இருந்த படிக்கட்டுகள் அகற்றம்
சென்னை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஆகம விதிகளுக்கு முரணாக அமைக்கப்பட்ட படிக்கட்டுகள் அகற்றப்பட்டன.
பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலின் கருவறைக்கு செல்லும் வழியில், பாரம்பரியமாக ஆறு படிக்கட்டுகள் மட்டுமே இருந்தன. கோவில் நிர்வாகமும், ஹிந்து சமய அறநிலைய துறையும் இணைந்து, இந்த பாரம்பரிய படிக்கட்டுகளை, பத்து படிக்கட்டுகளாக மாற்றியமைத்தன.
இது, ஆகம விதிகளுக்கு முரணானது என, பக்தர்கள் மற்றும் ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கோவிலின் பாரம்பரியத்தையும், ஆகம விதிகளையும் மீறியதை கண்டித்து, காஞ்சி மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டங்களும், தொடர் போராட்டங்களும் நடத்தப்பட்டன. அதற்கு தற்போது பலன் கிடைத்துள்ளது.
இதுகுறித்து, ஹிந்து முன்னணி மாநில செய்தி தொடர்பாளர் இளங்கோவன் கூறியதாவது:
வரதராஜ பெருமாள் கோவிலில், பத்தாக மாற்றப்பட்டிருந்த படிக்கட்டுகள், மீண்டும் ஆறு என்ற அடிப்படையில், பழைய நிலைக்கு மாற்றப்பட்டது வரவேற்கத்தக்கது.
தொன்மையான ஆலயங்களின் ஆகம நெறிகளையும், பாரம்பரியத்தையும் காப்பதற்காக, ஹிந்து முன்னணி நடத்திய தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. கோவில்களில் ஆகம விரோத போக்கு தொடர்ந்தால், போராடி பாரம்பரியத்தை பாதுகாப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தற்காலத்தில் கோர்ட் உத்தரவின் அடிப்படையில் வழிபாட்டுத் தலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை ஏற்படுத்துவது கட்டாயம்.
ஊனமுற்ற முதிய பக்தர்களைத் தடுக்கும்படியான அமைப்பை எந்த இறைவனும் விரும்பமாட்டார்.
சில ஆலயங்களில் செயற்கைக் கால்களை அணிந்து கொண்டு அர்த்த மண்டபத்தில் நுழைவதை கூட தடுக்கிறார்கள்.
திராவிட மாடலும் , அதன் பி டீமும் எது தேவையில்லாததோ அதைத்தான் செய்யும் .....
பக்தர்களின் வசதிக்கென்று சில கட்டுமானங்கள் இருந்தால் நல்லதுதானே பல கோவில்களில் கபாலி வடபழனி ரேம்ப் வசதி செய்யப்பட்டுள்ளது இது ஆகம விதி முறையா .எல்லாவற்றுக்கும் பிரச்னை செய்யவேண்டாம்
கோவில்களில் மின்சார விளக்குகளும் எலெக்ட்ரானிக் சாதனங்களும் ஆகமவிதிக்கு உட்பட்டா அமைக்கப்பட்டுள்ளனமேலும்
-
கல்வி, தொழில் வளர்ச்சியில் மேன்மையுற்று வெற்றி தமிழகத்தை படைப்போம்; முதல்வர் விஜய் உறுதி
-
கையில் கட்டுடனும், மார்பில் காயங்களுடன் ஹிந்தி நடிகர் டைகர் ஷெராப் புகைப்படம்; குற்றவாளிகளுக்கு போலீசார் வலை
-
சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை; பாதிரியார் கைது
-
பாகிஸ்தானில் தொடரும் பயங்கரவாதிகளின் மர்ம மரணம்; 4வது மாடியில் இருந்து விழுந்து லஷ்கர் பயங்கரவாதி பலி
-
தொடரும் போராட்டம்; வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை: பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கண்டிப்பு
-
நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்: ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்