கைகளில் மரக்கன்று, சிலம்பம் சுற்றி சுற்றுச்சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு

பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே சின்னம்பள்ளி உயர்நிலை பள்ளி வளாகத்தில், 'இம்பாசிபிள் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்' மற்றும் மேச்சேரி சிலம்பாட்ட நற்பணி குழு இணைந்து நடத்திய, சிலம்பாட்ட உலக சாதனை நிகழ்ச்சி நேற்று நடந்தது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இதில் கலந்து கொண்டனர். மாணவர்கள் பாரம்பரிய வீரக்கலை சிலம்பத்தையும், மரக்கன்றையும் ஒரே நேரத்தில் ஏந்தி, தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். மரம் வளர்ப்பின் அவசியம், மரங்களை வெட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள், இயற்கையையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டிய முக்கியத்துவம் குறித்து, மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில், 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பரதநாட்டியத்தையும், இலக்கியக் கலைகளின்
சிறப்பையும் வெளிப்படுத்தினர். இதில், பென்னகரம், த.வெ.க., எம்.எல்.ஏ., கஜேந்திரன், சிலம்பம் மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு நினைவுப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை
வழங்கினார்.

Advertisement