ஆந்திர சட்டக்கல்லுாரியில் ‘சீட்’ வாங்கி தருவதாக மோசடி செய்த நபர் கைது
பொன்னேரி: ஆந்திர மாநில சட்டக்கல்லுாரியில், சட்டப்படிப்பு படிக்க ‘சீட்’ வாங்கி தருவதாக கூறி, 1.47 லட்சம் ரூபாய் மோசடி செய்த, 28 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பொன்னேரி, ஆலாடு சாலை பகுதியை சேர்ந்தவர் அபினேஷ், 26. இவரது உறவினர் ஒருவர் மூலம், சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்த சாமுவேல், 28, என்பவர் அறிமுகம் ஆகி இருவரும் நண்பர்கள் ஆகினர்.
இந்நிலையில், சாமுவேல், அபினேஷிடம், நடப்பு கல்வியாண்டில் ஆந்திர மாநில சட்டக்கல்லுாரியில், சட்டம் படிக்க ‘சீட்’ வாங்கி தருவதாக கூறி, 1.47 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார்.
கல்லுாரியில் சாமுவேல் ‘சீட்’ வாங்கி தரமால் அபினேஷை அலைகழித்து உள்ளார்.
இது குறித்து அபினேஷ், பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்படி போலீசார் வழக்கு பதிந்து சட்டக்கல்லுாரியில் சீட் வாங்கி தருவாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட சாமுவேலை நேற்று கைது செய்தனர்.
மேலும்
-
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் ; அமைச்சர் அருண்ராஜ்
-
சவூதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்களே கவனம்; புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டது தூதரகம்
-
உண்டியல் பணத்தை வாங்கிப்போடுவது மட்டுமே அறநிலையத்துறையின் வேலையாக உள்ளது; அண்ணாமலை
-
திருப்பூர் ரயில் நிலையம்: ஒரே நாளில் 27 ஆயிரம் பேர்
-
பழச்சந்தையில் திடீர் மின் தடை ரூ.2 கோடி வியாபாரம் பாதிப்பு
-
மின் தடையை கண்டித்து புதுவண்ணையில் மறியல்