ஹரியானா – ஸ்வீடன் இடையே ரூ.4,000 கோடி முதலீட்டு ஒப்பந்தம்
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் வர்த்தகம், முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில், ஸ்வீடன் நிறுவனங்களுடன் ரூ.4,000 கோடி மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதாக அம்மாநில அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது குறித்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஸ்வீடனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஹரியானா முதல்வர் நயாப் சைனி முன்னிலையில், ஸ்வீடன் நிறுவனங்களுடன் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
ஹரியானாவின் ‘குருகிராம்’ – ஸ்வீடனின் ‘ஸ்டாக்ஹோம்’ ஆகிய இரு நகரங்களுக்கு இடையே தொழில்நுட்ப புத்தாக்கம், ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள், நிலையான நகர்ப்புற வளர்ச்சி, அறிவுப் பரிமாற்றம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவதற்காக 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அத்துடன், சில்லரை வர்த்தகம் மற்றும் சரக்கு கிடங்குகள் துறைகளில் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. இதன் வாயிலாக, நவீன கிடங்கு கட்டமைப்புகள், சில்லரை வர்த்தக நிறுவனங்களின் விரிவாக்கம் மற்றும் சரக்குப் போக்குவரத்துத் துறையில் புதிய முதலீடுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்தவும், பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹரியானா இளைஞர்களுக்கு சர்வதேச தரத்திலான திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்க ஸ்வீடன் நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் ; அமைச்சர் அருண்ராஜ்
-
சவூதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்களே கவனம்; புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டது தூதரகம்
-
உண்டியல் பணத்தை வாங்கிப்போடுவது மட்டுமே அறநிலையத்துறையின் வேலையாக உள்ளது; அண்ணாமலை
-
திருப்பூர் ரயில் நிலையம்: ஒரே நாளில் 27 ஆயிரம் பேர்
-
பழச்சந்தையில் திடீர் மின் தடை ரூ.2 கோடி வியாபாரம் பாதிப்பு
-
மின் தடையை கண்டித்து புதுவண்ணையில் மறியல்