குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி
தேனி: டி.என்.பி.எஸ்.சி., சார்பில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், வி.ஏ.ஓ., வனக்காப்பாளர், வனக்காவலர் உள்ளிட்ட 6574 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு நவ., 5க்குள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அக்.,23 துவங்குகிறது. இப்பயிற்சியின்போது மாதிரி தேர்வுகள், இலவச பாடக்குறிப்புகள் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப நகல், பாஸ்போர்ட் புகைப்படத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். அல்லது 63792 68661 என்ற அலைபேசியை தொடர்பு கொண்டு பங்கேற்கலாம் என கலெக்டர் சிவகிருஷ்ண மூர்த்தி தெரிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் ; அமைச்சர் அருண்ராஜ்
-
சவூதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்களே கவனம்; புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டது தூதரகம்
-
உண்டியல் பணத்தை வாங்கிப்போடுவது மட்டுமே அறநிலையத்துறையின் வேலையாக உள்ளது; அண்ணாமலை
-
திருப்பூர் ரயில் நிலையம்: ஒரே நாளில் 27 ஆயிரம் பேர்
-
பழச்சந்தையில் திடீர் மின் தடை ரூ.2 கோடி வியாபாரம் பாதிப்பு
-
மின் தடையை கண்டித்து புதுவண்ணையில் மறியல்
Advertisement
Advertisement