அரசு மருத்துவக் கல்லுாரி பேராசியருக்கு சாதனையாளர் விருது

சிதம்பரம்: சிதம்பரத்தில் உள்ள மாவட்ட மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜூனியர் சுந்தரேஷிற்கு அறுவை சிகிச்சையில் சிறந்து விளங்கியமைக்கான சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

ரோட்டரி கிளப் ஆப் புதுச்சேரி ஆரோசிட்டி சார்பில் நடைபெற்ற “நேஷன் மேக்கர்ஸ் விருது – 2026” விழா நடந்தது. புதுச்சேரியில் நடந்த விழாவில், கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவ கண்காணிப்பாளரும், அறுவை சிகிச்சைத் துறைப் பேராசிரியருமான ஜூனியர் சுந்தரேஷிற்கு , அறுவை சிகிச்சைத் துறையில் சிறந்து விளங்கியமைக்காக “வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

மருத்துவத் துறையில் அவரது நீண்டகால அர்ப்பணிப்பு, அறுவை சிகிச்சைத் துறையில் ஆற்றிய பங்களிப்பு பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.

Advertisement