மணிப்பூரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி; மீண்டும் பதற்றம்

இம்பால்: மணிப்பூரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார். 4 பேர் காயம் அடைந்தனர்.

மணிப்பூர் காம்ஜோங் மாவட்டத்தில் சாசாட் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் குகி இன மக்கள் வாழ்கின்றனர். இங்கு நுழைந்த சில சந்தேக நபர்கள், திடீரென துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் 36 வயதுடைய ஒருவர் பலியானார்.

சாசாட் கிராமத்தின் தலைவர் தாங்ஜாஹூ ஹாவ்கிப் மற்றும் அவருடன் இருந்த 4 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பதற்றமான சூழல் நிலவுவதால் சந்தேக நபர்களின் தாக்குதலை பழங்குடியினருக்கான ஒற்றுமைக்குழு கண்டித்துள்ளது. மத்திய படைகளை பாதுகாப்புக்காக அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

Advertisement