புகையிலை விற்ற இருவர் கைது

நத்தம்: நத்தம் -இன்ஸ்பெக்டர் பொன்குணசேகரன், எஸ்.ஐ., அபினேஷ் உள்ளிட்ட போலீசார் ஆவிச்சிபட்டி பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக டூவீலரில் வந்தவர்களை நிறுத்தி சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை கொண்டு செல்வது தெரிந்தது.

நத்தம் காமராஜர் நகர் அன்வர் அலி 39, முஸ்லீம் மேலத்தெரு சையதுபகர்தீன் 48, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 கிலோ புகையிலை, பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement