சிவகங்கையில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரிப்பு: அதிகாரிகள் சுணக்கம்
சிவகங்கை: சிவகங்கை நகராட்சியில் அதிகாரிகளின் அலட்சியத்தால் ரோட்டின் ஓரங்களில் காலியாக உள்ள இடங்களில் பெட்டிகள் அமைத்து ஆக்கிரமிப்பு கடைகள் புதிது புதிதாக உருவாகி வருகிறது.
சிவகங்கை நகரின் முக்கிய கடை வீதியாக நேருபஜார், காந்தி வீதி, தாலுகா அலுவலக ரோடு, அரண்மனை பகுதி, போஸ் ரோடு, மஜித்ரோடு, மரக்கடை வீதி, தெற்கு ராஜவீதி உள்ளது. இந்த பகுதிகளில் ரோட்டின் ஓரங்களில் கடை வைத்திருப்போர் செய்யும் ஆக்கிரமிப்பால் சாலையில் அளவுகள் குறுகி விட்டது. தொண்டி ரோட்டின் இருபுறமும் வாகனங்களை நிறுத்துகின்றனர். மஜித்ரோடு, நேரு பஜார், காந்திவீதி, மரக்கடை வீதி உள்ளிட்ட பகுதியில் கடைக்காரர்கள் தங்களது கடையின் அளவை தாண்டி கால்வாயை மூடி கடை அமைத்துள்ளனர். அதேபோல் தெரு ஓரங்களில் காளி இடங்கள் இருந்தால் அங்கு அனுமதியின்றி பெட்டிக்டைகள், தள்ளுவண்டி கடைகள் அமைத்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பு கடைகளால் ரோட்டில் வாகனங்கள் செல்ல மிகவும் சிரமப்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெருவிக்கின்றனர். நகரில் அனுமதி பெறாமல் கடை அமைப்பதற்கு யார் பாதுகாப்பு கொடுக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. அதேபோல் சண்முகராஜா கலையரங்கம் முன்பு உள்ள கடைகளில் முன் பகுதியில் அரசியல் கட்சியினர் பிளக்ஸ் பேனர்களை வைத்து போக்குவரத்திற்கும், வியாபாரிகளுக்கு இடையூறு செய்கின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் நகரில் காலியாக உள்ள இடங்களில் அனுமதி பெறாமல் வைத்துள்ள பெட்டிகளை அப்புறப்படுத்த வேண்டும். ரோட்டின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
மேலும்
-
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் ; அமைச்சர் அருண்ராஜ்
-
சவூதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்களே கவனம்; புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டது தூதரகம்
-
உண்டியல் பணத்தை வாங்கிப்போடுவது மட்டுமே அறநிலையத்துறையின் வேலையாக உள்ளது; அண்ணாமலை
-
திருப்பூர் ரயில் நிலையம்: ஒரே நாளில் 27 ஆயிரம் பேர்
-
பழச்சந்தையில் திடீர் மின் தடை ரூ.2 கோடி வியாபாரம் பாதிப்பு
-
மின் தடையை கண்டித்து புதுவண்ணையில் மறியல்