போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இதில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசார் பங்கேற்று குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் போக்சோ சட்டம், குழந்தை பாதுகாப்பு, கட்டாய கல்வி, குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், மொபைல் போன்களை அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்கப்பட்டது.

குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை அச்சமின்றி இலவச உதவி எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Advertisement