‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ முகாம்
அன்னூர்: அன்னூரில் வரும் 22, 23 தேதிகளில், கலெக்டர் பங்கேற்கும் 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' முகாம் நடைபெறுகிறது.
பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்து, அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் தடையின்றி, மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' என்னும் முகாம் அனைத்து தாலுகாக்களிலும் நடத்தப்படுகிறது.
அன்னூர் தாலுகாவில், இந்த ஆண்டுக்கான முகாம், வருகிற, 22, 23 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. 22ம் தேதி காலை 9:00 மணி முதல், கோவை கலெக்டர் பவன் குமார், அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அரசு மருத்துவமனை, நூலகம், வேளாண் அலுவலகம், ரேஷன் கடைகள், பேரூராட்சி அலுவலகம் உள்பட பல்வேறு அலுவலகங்களை நேரில் ஆய்வு செய்கிறார்.
பின்னர், மாலை 4:00 மணிக்கு, அன்னூர் தாலுகா அலுவலகத்தில், அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார்.
'பொதுமக்கள் 22ம் தேதி மாலை 4:00 மணிக்கு, அன்னூர் தாலுகா அலுவலகத்தில் கலெக்டரிடம் நேரடியாக மனு தரலாம்,' என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும்
-
சாட்டையால் அடித்து 'பேய் விரட்டும்' விநோத நிகழ்வு
-
ஆசிய பாரா விளையாட்டு; இந்தியாவுக்கு குண்டு எறிதலில் தங்கம்... வில்வித்தையில் வெள்ளி
-
காவல்துறை சமூகத்தின் பாதுகாப்பு அரண்; சொல்கிறார் ஸ்டாலின்
-
'காலைக்கதிர்' அரிச்சுவடி ஆரம்பம் கோலாகலம் 'அ, ஆ' எழுதிய மழலையரால் பெற்றோர் நெகிழ்ச்சி
-
உக்ரைன் காலை வாரினார் எலான் மஸ்க்: ஸ்டார்லிங்க் இணையச் சேவை வேகம் குறைப்பு
-
பயங்கரவாதத்திற்கு எதிராக சகிப்புத்தன்மை கூடாது; அமெரிக்காவுக்கு ஜெய்சங்கர் வலியுறுத்தல்