பயங்கரவாதத்திற்கு எதிராக சகிப்புத்தன்மை கூடாது; அமெரிக்காவுக்கு ஜெய்சங்கர் வலியுறுத்தல்
மும்பை: இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, மும்பை தாக்குதல் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் மார்கோ ரூபியோ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். வர்த்தகம், தொழில்நுட்பம், இந்தோ-பசிபிக் பிராந்தியப் பாதுகாப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
அப்போது, அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது; மும்பை தாக்குதல் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதற்காக ஒட்டுமொத்த இந்தியா சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மும்பை தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ஹூசேன் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்கும் அமெரிக்காவின் முடிவை வரவேற்கிறோம். பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை பாதுகாக்கும் உரிமையில் இந்தியா உறுதியாக உள்ளது. கூட்டணி நாடுகளும் பயங்கரவாதத்திற்கு எதிராக சகிப்புத்தன்மை கூடாது.
ஒவ்வொரு நாடும் தங்களின் தேசிய நலன்களை முன்னிறுத்துவது வழக்கமானது. இதுபோன்ற சூழலில், இருநாடுகளின் உறவை வலுப்படுத்த வேண்டும். இந்தோ-பசிபிக் பிராந்தியப் பாதுகாப்பில் இருநாடுகளுக்கும் கூட்டுப்பொறுப்புகள் உள்ளன.
இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு பல அமெரிக்கர்கள் உதவியுள்ளதாக வரலாறு சொல்லுகின்றன. இந்தியர்களும் அமெரிக்காவின் தொழில்நுட்ப யுகத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளளனர். இருநாடுகளிடையே பல கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. பல ஆண்டுகளாக இருநாட்டு உறவுகள் புதிய பரிமாணங்களை பெற்று வருகின்றன. இவ்வாறு கூறினார்.
மேலும்
-
தேச விரோத கருத்துக்களை செய்தியாக ஒளிபரப்பக் கூடாது: டிவி நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
-
தி.மு.க., 'மாஜி'க்களை விட்டுவிட்டு என்னை மட்டும் விமர்சிக்கின்றனர்: அமைச்சர் வெங்கடரமணன் ஆதங்கம்
-
'வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி': பாஜ குற்றச்சாட்டு
-
பட்டாசு கடைகளுக்கு இடம் ஒதுக்கும் இ- டெண்டர்: கண்காணிக்கிறது ஐகோர்ட்
-
செஞ்சி அருகே சிறுமி, பெண் மாயம்: மூன்று மணி நேரத்தில் மீட்ட போலீசார்
-
ஆசிரியர் வீட்டில் திருட்டு இருவரிடம் விசாரணை