உக்ரைன் காலை வாரினார் எலான் மஸ்க்: ஸ்டார்லிங்க் இணையச் சேவை வேகம் குறைப்பு
- நமது சிறப்பு நிருபர் -
கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக, உக்ரைன்-ரஷ்யா இடையே போர் நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உதவிகளை வழங்கி வந்தது. அமெரிக்கா தற்போது ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டி வருகிறார். உளவு தகவல்கள் வழங்குவதையும் அமெரிக்கா நிறுத்திவிட்டதாக தெரிவித்து உள்ளார். ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் உக்ரைன் ராணுவம் திணறி வருகிறது.
உக்ரைனுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியை அமெரிக்கா கொடுத்துள்ளது. உக்ரைன் ராணுவம் பயன்படுத்தும் ஸ்டார்லிங்க் இணையச் சேவையின் வேகத்தைக் குறைக்க எலான் மஸ்க் உத்தரவிட்டார். மணிக்கு 160 கிலோமீட்டருக்கும் (100 mph) அதிக வேகத்தில் பயணிக்கும் உக்ரைன் ராணுவ சாதனங்களுக்கான இணைய வேகத்தை குறைக்க ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் வரம்புகளை விதித்தது. ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்லிங்க் சேவையை மட்டும் நம்பியிருந்த உக்ரைன் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.
ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது டிரம்ப் எச்சரிக்கையை மீறி உக்ரைன் தாக்குதல் நடத்தி வருகிறது. அதிருப்தி காரணமாகவே, அதிபர் டிரம்ப் மற்றும் அமெரிக்க அதிகாரிகள், எலான் மஸ்க் கலந்தாலோசித்து இந்த வேகக் குறைப்பு முடிவை எடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ''உக்ரைன் ராணுவம் பயன்படுத்துவது அமெரிக்க அரசின் கட்டுப்பாட்டில் உள்ள "ஸ்டார்ஷீல்டு" (Starshield) சேவை; இதன் வேகக் குறைப்பு நடவடிக்கையை அமெரிக்க ராணுவமும், அதிபர் டிரம்புமே தீர்மானித்தனர்'' என எலான் மஸ்க் நழுவினார்.
''ஸ்டார்லிங்க் இணைய சேவை வேகத்தை குறைக்க உத்தரவிட்டது யார் என்று தனக்குத் தெரியாது, அதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்'' என டிரம்ப் எதுவுமே தெரியாதது போல் கூறிவிட்டார். தங்குதடையற்ற ஸ்டார்லிங்க் சேவையை மீண்டும் வழங்குமாறு அமெரிக்காவிடமும், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திடமும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யாவை எதிர்த்து போர் செய்யும் தங்கள் நாட்டின் காலை வாரி விடுவது போன்றது இந்த செயல் என்று உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
@block_P@
இந்தியா செய்தது சரிதான்
இந்தியாவில் இணைய சேவை வழங்குவதற்கு அனுமதி வழங்கவில்லை என்று எலான் மஸ்க் குற்றச்சாட்டு கூறி வருகிறார். அவருக்கு சேவை வழங்க அனுமதி கொடுத்தால் எத்தகைய சிக்கல் ஏற்படும் என்பது இப்போது உக்ரைன் போரில் வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது. மஸ்க் நிறுவனத்திற்கு அனுமதி வழங்காமல், உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றும்படி இந்தியா உத்தரவிட்டது சரிதான் என்பதை நிரூபணம் செய்யும் வகையில் இந்த நிகழ்வு அமைந்துள்ளது.block_P
நமது தாய் நாட்டுக்குள் எந்த அந்நிய நாட்டினரின், அந்நிய சக்திகளின் இணைய சேவை தேவை இல்லை. வெள்ளையர்கள் நம்மை ஆண்ட காலத்தில் நம் முன்னவர்கள் அந்நிய பொருட்களை பகிஷ்கரித்ததுபோல இப்போதும் நாம் அந்நிய பொருட்களை முடிந்த அளவுக்கு தவிர்க்கவேண்டும். நம் நாட்டு பொருட்களையே முடிந்த அளவுக்கு அதிகமாக பயன்படுத்தவேண்டும். அதுதான் தேச பற்று.
ஆயிரம் குறை சொன்னாலும் பிஜேபி அரசில் மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் உள்ளார்கள் என்பதற்கு இந்த மாதிரி கருத்து Strategy முடிவுகளும் காரணம்
இன்னும் ரெண்டு வாரத்தில் இந்தியா ஒப்பந்தம் போட்டு கையெழுத்தைப் போடும். அப்ப என்ன முட்டு கொடுக்கலாம்ன்னு யோசனை பண்ணி வச்சுக்கோங்க.
இந்தியாவை அழிக்க நினைக்கும் எதிரிகளுடன் கை குலுக்கும் துரோகி ராகுலே? உனக்காகத்தான் இந்த நியூஸ். உனது நெருங்கிய நண்பர் எலான்மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு இந்தியாவில் அனுமதி அளித்தால் நாளை இந்தியாவுக்கும் இதே நிலைமைதான். உற்சாகம் தேடி தாய்லாந்து, வியட்நாம் பறக்கும் உமக்கு நாட்டைப் பற்றிய கவலை எங்கே இருக்கப் போகிறது?
தாய்லாந்துக்கு ஓடிய ராகுலுக்கு இது தெரியுமா.....அவரது உற்ற நன்பராயிற்றே எலன் மாஸ்க்...!!!
இந்தியா பாகிஸ்தான் போர் ஏற்பட்டால்... போர் நடக்கும் சமயத்தில் அமெரிக்கா கூறினால் இணையத்தை இதே போல முடக்க மாட்டார் என்று என்ன நிச்சயம் ?... இந்திய நாட்டின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு தொழில் செய்வதாக இருந்தால் இந்தியா வரலாம்.... இல்லையென்றால் போய் கொண்டே இருங்கள்.....உங்கள் சேவை எங்களுக்கு தேவையில்லை.
இலான் மஸ்குக்கு இந்தியா இடம் தராது. நமக்கு நல்லதாகவே பல இருக்கின்றன.
இவனை இந்தியாவில் விட்டால் கான் க்ராஸ் தலைமையிலான தேசத்தின் துரோக கூட்டணியினர் இந்தியாவை ஏற்கனவே 90 சதம் இடங்களை வக்ஃபு வாரியம் அட்டையை போட வழி வகுத்தது போல இந்தியாவை அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு விற்று விடும். எச்சரிக்கை...
உக்ரைன் போரை நிறுத்தாமல் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்துக்கொண்டே இருந்தால் போர் எப்படி முடிவுக்கு வரும்? ட்ரொனுக்கு அதிவேக இன்டர்நெட் விடும் குறைந்த இன்டர்நெட்டில் சரியாக வேலை செய்யாது. டிரம்ப் சொல்லியிருப்பார் வேகம் குறைக்க நண்பர் மஸ்க் குறைத்துவிட்டார். எல்லாம் போர் முடிவுக்கு கொண்டு வர செய்வதே ஆகும்.மேலும்
-
இபிஎஸ்யும், திமுகவும் ஒன்று தான்; சொல்கிறார் அமைச்சர் செங்கோட்டையன்
-
தொகுதி மறுவரையறை விவகாரம்; பேச்சுவார்த்தைக்கு முன்வராத காங்கிரஸ்; கிரண் ரிஜுஜூ குற்றச்சாட்டு
-
காவலர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து முதல்வர் விஜய் மரியாதை
-
எஸ்பிஐ வங்கி மீது சைபர் தாக்குதல்; 3.900 வாடிக்கையாளர்களின் தரவுகள் கசிவு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.800, வெள்ளி கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் குறைவு
-
இந்தியாவுடனான அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதிகட்டம்; அதிபர் டிரம்ப் தகவல்