'காலைக்கதிர்' அரிச்சுவடி ஆரம்பம் கோலாகலம் 'அ, ஆ' எழுதிய மழலையரால் பெற்றோர் நெகிழ்ச்சி
சேலம்,:'காலைக்கதிர்' நாளிதழின், 'பட்டம்' இதழ் நடத்திய, 'அ'னா... 'ஆ'வன்னா... அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சியில், மழலையரின் பிஞ்சு விரல்களை பிடித்து, பிரபல கல்வியாளர்கள், 'அ, ஆ' எழுத வைத்து, அவர்களை கல்வி கோவிலுக்குள் அழைத்துச்சென்றனர்.
வெற்றியை தேடித்தரும் நன்னாளாகவும், கலை, கல்விக்கு அதிபதியான சரஸ்வதிதேவிக்கு உகந்த நாளாகவும் விஜயதசமி உள்ளது. இந்த நாளில் தொடங்கும், கலை, கல்வி உள்ளிட்ட செயல்கள், வெற்றியை தேடித்தரும் என்பது நம்பிக்கை. இன்றைய போட்டி நிறைந்த சூழலில், சிறந்த எதிர்காலத்தை வழங்கும் கல்வியை, இந்நன்னாளில் குழந்தை
களுக்கு தொடங்கி வைக்க, பெற்றோர் இடையே ஆர்வம் அதிகரித்து வரு
கிறது. இதனால் அனைத்து வழிபாட்டுத்தலங்கள், பள்ளிகளில் விஜயதசமி அன்று, வித்யாரம்பம் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
அதனால் நம் வாசகர் குழந்தைகளின் வித்யாரம்பம், மறக்க முடியாதபடி என்றென்றும் நினைவில் நிலைத்திருக்க வேண்டும் என்பதால், பிரபல கல்வியாளர்களின் ஆசியுடன், 'அ'னா... 'ஆ'வன்னா... அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சியை, 'காலைக்கதிர்' நாளிதழின் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
அதன்படி நேற்று, சேலம், இடைப்பாடி, நாமக்கல்லில் நடந்தது. சேலம் வடக்கு அம்மாபேட்டையில் உள்ள, சாய் சக்தி மெட்ரிக் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், 'காலைக்கதிர்' பொது மேலாளர் ஜெரால்டு வரவேற்றார். சேலம் அரசு மகளிர் கலைக்கல்லுாரி முதல்வர் காந்திமதி, சேலம் பி.எஸ்.என்.எல்., இணை பொது மேலாளர் சுபா(செயல்பாடு), சாய் சக்தி மெட்ரிக் பள்ளி தாளாளர் கார்த்திகை பாலன் ஆகியோர், குத்து விளக்கேற்றி, விழாவை தொடங்கி வைத்தனர்.
அதில் சரஸ்வதி பூஜையை தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்
களான காந்திமதி, சுபா, கார்த்திகை பாலன் ஆகியோர், குழந்தைகளின் விரல்களை பிடித்து, நெல்மணிகள் நிரப்பப்பட்ட தாம்பாளத்தில், 'அ'னா 'ஆ'வன்னா எழுத வைத்து அரிச்சுவடியை தொடங்கி வைத்தனர். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்கள், கல்வியாளர்களின் கைகளால், தங்கள் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்யப்படுவதையும், ஆசி வழங்கு
வதையும், ஏராளமான பெற்றோர், நெகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர்.
அதேபோல், 'காலைக்கதிர்' நாளிதழின், 'பட்டம்' இதழ், இடைப்பாடி, யுனிவர்சல் பப்ளிக் பள்ளியுடன் இணைந்து, அப்பள்ளியில் நடத்திய நிகழ்ச்சியில், 'காலைக்கதிர்' ஆசிரியர் ராமச்சந்திரன் வரவேற்றார்.
சங்ககிரி டி.எஸ்.பி., சுரேஷ்குமார், இடைப்பாடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கோகுலகிருஷ்ணன், யுனிவர்சல் கல்வி
நிறுவன தலைவர் சீனிவாசன், நிகழ்ச்சிக்கு முதல், இரண்டாவதாக வந்த மாணவர்கள் ருத்ரன், பிரணவி அக்ஷயாவின் பெற்றோர் இணைந்து, குத்து விளக்கு ஏற்றி, இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களான, சுரேஷ்குமார், கோகுல
கிருஷ்ணன், சீனிவாசன் ஆகியோர், குழந்தைகளின் பிஞ்சு விரல்களை பிடித்து, 'அ, ஆ' எழுத வைத்தனர். 100க்கும் மேற்பட்ட பெற்றோர், தங்கள் குழந்தைகள், பிரபலங்கள் உதவி
யுடன், அ, ஆ எழுதியதை கண்டுகளித்து மகிழ்ந்தனர். பள்ளி செயலர் சக்தி உள்ளிட்ட ஆசிரியர்கள்
பங்கேற்றனர்.
அனைத்து குழந்தைகளுக்கும், 'ஸ்கூல் பேக்' உள்பட, 1,000 ரூபாய் மதிப்பில், சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. தவிர பெற்றோர் பின்னணியில் நிற்க, பிரபலங்கள் மடியில் மழலையர், 'அ'னா 'ஆ'வன்னா எழுதிய காட்சியை பதிவு செய்து புகைப்படத்துடன் கூடிய, 'காலைக்கதிர்' சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டு
உடனுக்குடன் வழங்கப்பட்டன.
'காலைக்கதிர் நாளிதழுக்கு
முதலில் நன்றி'
யுனிவர்சல் கல்வி நிறுவன தலைவர்
சீனிவாசன்: குழந்தைகளுக்கு கல்வி செல்வத்தை ஏற்படுத்தி தரும் அரிச்சுவடி நிகழ்ச்சியை தொடர்ந்து, 3ம் ஆண்டாக நடத்த வாய்ப்பு தந்த, 'காலைக்கதிர்' நாளிதழுக்கு முதலில் நன்றி. மாதா, பிதா, குரு என பெற்றோருக்கு அடுத்தபடியாக ஆசிரியரை வைத்துள்ளனர். அந்த பொறுப்பை ஏற்கும்படி, இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது.
'திருவிழா போல் நடத்தும்
காலைக்கதிர் நாளிதழ்'
சங்ககிரி டி.எஸ்.பி., சுரேஷ்குமார்: 'பிச்சை புகினும் கற்கை நன்றே' என்பது முன்னோர் வாக்கு. படிப்பு தான் ஒரு மனிதனை உயர்ந்த நிலைக்கு அழைத்துச்செல்லும். அதன்படி குழந்தைகள், முதன்முதலாக கல்வி கற்க வருவதை, 'காலைக்கதிர்' நாளிதழ், 'அரிச்சுவடி' நிகழ்ச்சி மூலம் திருவிழா போல் நடத்தி வருகின்றனர். நாங்கள் படிக்கும்போது, இதுபோன்று எங்களை ஊக்குவிக்க யாரும் இல்லை. அந்த வரிசையில், 'காலைக்கதிர்', யுனிவர்சல் பள்ளி சிறப்பான செயலை செய்து வருகிறது.
'அ, ஆ... எழுத கற்றுத்தந்ததால்
மனம் நிறைவாக உள்ளது'
இடைப்பாடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கோகுலகிருஷ்ணன்: எதிர்கால இந்தியா, படித்த திறமையானவர்கள் கைகளில் தான் உள்ளது. அப்படி சிறந்த மாணவர்களை உருவாக்குவதில் முதல் படி தான் இந்த அரிச்சுவடி. இதை காலைக்கதிர் நாளிதழ், யுனிவர்சல் பள்ளி சிறப்பாக செய்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு அ... ஆ... எழுத கற்று தந்தேன். இரண்டாம் முறை வந்துள்ளேன். மனம் நிறைவாக உள்ளது.
நன்றி
சேலம், இடைப்பாடி, நாமக்கல் ஆகிய இடங்களில், 'அரிச்சுவடி ஆரம்பம்' நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பெற்றோர்; மழலையருக்கு, 'அ'னா 'ஆ'வன்னா எழுத வைத்த பிரபலங்கள்; இணைந்து நடத்திய சேலம் சாய் சக்தி மெட்ரிக் பள்ளி, இடைப்பாடி யுனிவர்சல் பப்ளிக் பள்ளி, நாமக்கல் வேப்பநத்தம் நேஷனல் பப்ளிக் பள்ளி, சேனல் பார்ட்னர் 'தமிழ் ஜனம்' மற்றும் நிகழ்ச்சி நடத்த உதவிய அனைவருக்கும், 'காலைக்கதிர்' சார்பில் நன்றி.




மேலும்
-
இரு கோவில்களில் திருட்டு முகமூடி நபர் துணிகரம்
-
கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் சுற்று சுவர் அமைக்கப்படுமா?
-
கடலுார: மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர்கள் மோகன்ராஜ், சுந்தர் ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர். ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரிகிருஷ்ணன் மற்றும் இணை செயலாளர் பாபு கண்டன உரையாற்றினர். அரசு ஊழியர் சங்கம் மாவட
-
வீடியோ காலில் தோன்றிய நித்யானந்தா புதுச்சேரி அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கு அருளாசி
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
-
மனைவியை தாக்கிய கணவர் கைது