கனமழையால் கூடப்பட்டு தடுப்பணை நிரம்பியது: 19 ஏரிகளுக்கு நீர் செல்ல வாய்ப்பு
செஞ்சி: செஞ்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன் தினம் இரவு பெய்த கனமழையால், வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வராக நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கூடப்பட்டு தடுப்பணை நிரம்பி வழிந்தது.
செஞ்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஆறுகள், ஓடைகள் தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டன. இந்நிலையில், வராக நதியின் நீர் பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் வராக நதியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளம் பெருக்கெடுத்தது.
இதனால் கூடப்பட்டு தடுப்பணை நிரம்பி வழிந்தது. இதில் இருந்து மேலச்சேரி, சிங்கவரம், நாட்டேரி, செஞ்சி, சிறுகடம்பூர் ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும்.
இதே போல் செவலபுரை தடுப்பணை நிரம்பி வழிவதால் வல்லம் ஒன்றியத்தில் உள்ள 14 ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல வாய்ப்பு உள்ளது
வராக நதியும் சங்கராபரணி ஆறும் இணைந்து செஞ்சி வழியாகச் செல்வதால், சங்கராபரணி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வறட்சியினால் விவசாய பணிகளை செய்யாமல் இருந்தனர். தற்போது பெய்த கனமழை விவசாயிகள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது
மேலும்
-
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் ; அமைச்சர் அருண்ராஜ்
-
சவூதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்களே கவனம்; புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டது தூதரகம்
-
உண்டியல் பணத்தை வாங்கிப்போடுவது மட்டுமே அறநிலையத்துறையின் வேலையாக உள்ளது; அண்ணாமலை
-
திருப்பூர் ரயில் நிலையம்: ஒரே நாளில் 27 ஆயிரம் பேர்
-
பழச்சந்தையில் திடீர் மின் தடை ரூ.2 கோடி வியாபாரம் பாதிப்பு
-
மின் தடையை கண்டித்து புதுவண்ணையில் மறியல்