லாரி மோதி விபத்து மாமியார் பலி மருமகள் காயம்
படப்பை: ஸ்கூட்டர் மீது லாரி மோதியதில், 43 வயதுடைய மாமியார் பலியானார்; மருமகள் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
படப்பை அருகே, புஷ்பகிரி பகுதியைச் சேர்ந்த குமரவேல் மனைவி ராஜேஸ்வரி, 43. இவர், தன் பெயருடைய மருமகள் ராஜேஸ்வரி, 28, உடன், ‘ஹோண்டா டியோ’ ஸ்கூட்டரில், வண்டலுார் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், மண்ணிவாக்கம் அருகே, நேற்று சென்று கொண்டிருந்தார்.
அவ்வழியே வேகமாக சென்ற டிப்பர் லாரி, ஸ்கூட்டர் மீது மோதியதில் மாமியார் ராஜேஸ்வரி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மருமகள் ராஜேஸ்வரி, காயங்களுடன் தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் வந்தவாசியைச் சேர்ந்த ராஜ்குமார், 41, என்பவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் ; அமைச்சர் அருண்ராஜ்
-
சவூதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்களே கவனம்; புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டது தூதரகம்
-
உண்டியல் பணத்தை வாங்கிப்போடுவது மட்டுமே அறநிலையத்துறையின் வேலையாக உள்ளது; அண்ணாமலை
-
திருப்பூர் ரயில் நிலையம்: ஒரே நாளில் 27 ஆயிரம் பேர்
-
பழச்சந்தையில் திடீர் மின் தடை ரூ.2 கோடி வியாபாரம் பாதிப்பு
-
மின் தடையை கண்டித்து புதுவண்ணையில் மறியல்
Advertisement
Advertisement