கனமழையில் எம்.எல்.ஏ.,க்களின் களப்பணி குறித்த விவாதம்
புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 16ம் தேதி இரவு திடீரென பெய்த கனமழையால் காமராஜர் சாலை, அண்ணா சாலை, நேரு வீதி உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இந்தச் சூழலில், ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ., விக்னேஷ் கண்ணன் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ., அசோக் ஆனந்த் ஆகியோர் மழையில் நனைந்தபடியே களமிறங்கி, பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தினர். இவர்களின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
இதற்கிடையே, காமராஜர் நகர் தொகுதி எம்.எல்.ஏ., ஜோஸ் சார்லஸ் மார்ட்டினிடம், மற்ற எம்.எல்.ஏ.,க்களைப் போல நீங்கள் ஏன் களத்திற்குச் செல்லவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘எம்.எல்.ஏ., மழையில் நனைவதால் மட்டும் என்ன பயன், மக்களுக்குத் தேவையானதை சரியான முறையில் செய்து கொடுப்பதே பணி என்றார்.
இதற்குப் பதிலடி தரும் விதமாக எம்.எல்.ஏ., விக்னேஷ் கண்ணன், மக்கள் அழைத்தால் நேரம் காலம் பாராமல் சென்று உதவுவதே எனது பணி. அதைத் தொடர்ந்து செய்வேன் என்றார்.
மழையில் களத்தில் இறங்கி மக்களைச் சந்திப்பதா அல்லது பின்னணியில் நின்று உடனடித் தீர்வுகளை வழங்குவதா என்ற இந்த இருவேறு அணுகுமுறைகள் தற்போது புதுச்சேரியில் பேசுபொருளாகியுள்ளன.
மேலும்
-
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் ; அமைச்சர் அருண்ராஜ்
-
சவூதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்களே கவனம்; புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டது தூதரகம்
-
உண்டியல் பணத்தை வாங்கிப்போடுவது மட்டுமே அறநிலையத்துறையின் வேலையாக உள்ளது; அண்ணாமலை
-
திருப்பூர் ரயில் நிலையம்: ஒரே நாளில் 27 ஆயிரம் பேர்
-
பழச்சந்தையில் திடீர் மின் தடை ரூ.2 கோடி வியாபாரம் பாதிப்பு
-
மின் தடையை கண்டித்து புதுவண்ணையில் மறியல்