எஸ்.ஐ.ஆர்., சர்ச்சையை விசாரிக்க நீதிபதிகள் குழு அமைக்க வேண்டும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
கோவை: ‘‘எஸ். ஐ. ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மீதான சர்ச்சையை விசாரிக்க, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும்,’’ என, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி கூறினார்.
கோவை, குனியமுத்தூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், பீகார் உள்பட, 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், 13 கோடி வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டிருப்பதாக கூறி, டில்லியில் தொடர் போராட்டங்கள் நடக்கின்றன. குடிமக்களின் ஓட்டுரிமை பறிக்கப்படுவது ஜனநாயகத்திற்கு எதிரானது; கண்டனத்துக்குரியது. இவ்விவகாரத்தில் மத்திய அரசின் மவுனம், சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் உரிய விளக்கம் தர வேண்டும். மேலும், மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து முதல் ஏழு நீதிபதிகள் கொண்ட தனி குழுவை அமைத்து, விசாரித்து, குறுகிய காலத்திற்குள் உண்மைத்தன்மையை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
நாகப்பட்டினத்தில் த.வெ.க. நிர்வாகி வீட்டில், 135 கிலோ மெத் ஆம்பெட்டமைன் போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆட்சியில் இருப்போர் போதையை ஒழிப்போம் என பேசுவதோடு நில்லாமல், செயலில் காட்ட வேண்டும்.
தமிழகத்தில் மின்வெட்டால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விலைவாசி உயர்வால் மக்கள் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். முதல்வர் விஜய், மக்களின் வாழ்வாதார பிரச்னைகளை தீர்க்க உரிய முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் ; அமைச்சர் அருண்ராஜ்
-
சவூதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்களே கவனம்; புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டது தூதரகம்
-
உண்டியல் பணத்தை வாங்கிப்போடுவது மட்டுமே அறநிலையத்துறையின் வேலையாக உள்ளது; அண்ணாமலை
-
திருப்பூர் ரயில் நிலையம்: ஒரே நாளில் 27 ஆயிரம் பேர்
-
பழச்சந்தையில் திடீர் மின் தடை ரூ.2 கோடி வியாபாரம் பாதிப்பு
-
மின் தடையை கண்டித்து புதுவண்ணையில் மறியல்