கணவர் மாயம் மனைவி புகார்

குளித்தலை:குளித்தலை அடுத்த நாகனுாரை சேர்ந்தவர் பாண்டீஸ்வரி, 26; பூ வியாபாரி. இவரது கணவர் கருப்பையா, 34; கார்பெண்டர். தம்பதிக்கு, இரண்டரை வயதில் ஒரு மகன் உள்ளார்.

கருப்பையா, திருச்சியில் வேலை செய்து வந்தார். கடந்த, 12ல் வேலை செய்த இடத்தில் பணம் வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால், மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. அவர் குறித்து எந்த தகவலும் இல்லாததால், அவரது மனைவி பாண்டீஸ்வரி அளித்த புகார்படி, தோகைமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement