கட்டட தொழிலாளி சாவு போலீசார் விசாரணை

கரூர்:கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் ஆலமரத்து காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 36; கட்டட தொழிலாளி. இவருக்கு, மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த, 15ல் ராஜேந்திரன், வெள்ளியணை அருகே செல்வம் நகரில் உள்ள திருமண மஹால் அருகே இறந்து கிடந்தார். இதுகுறித்து ராஜேந்திரனின் மனைவி சுமதி அளித்த புகார்படி, வெள்ளியணை போலீசார் ராஜேந்திரன் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Advertisement