சமூக சேவைக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் ஆர்எஸ்எஸ்; பிரதமர் மோடி பாராட்டு
-நமது சிறப்பு நிருபர்-
1925ம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று துவக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் இயக்கம், தேசக் கட்டமைப்பு, சமூக சேவைக்காக 100 ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளது என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நிறுவன தினத்தை முன்னிட்டு, எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்; அயராத உழைப்பு, சேவை மனப்பான்மையின் மூலம் அமைப்பை வளர்த்த சிறந்த ஆளுமைகள் அனைவருக்கும் எனது மரியாதையைச் சமர்ப்பிக்கிறேன்.
சேவை, சமூக அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு, ஒரு மகத்தான நூற்றாண்டைப் பூர்த்தி செய்துள்ளது.
அர்ப்பணிப்பு, கடமை உணர்வு மற்றும் 'தேசமே முதன்மை' என்ற கொள்கையைக் கொண்ட எண்ணற்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் தன்னார்வலர்கள், சமூக மேம்பாட்டிற்காகத் தொடர்ந்து பாடுபட்டு வந்துள்ளனர்.
வரும் காலங்களிலும் தேசத்தை இன்னும் வலிமையாகவும், உறுதியுடனும் மாற்றும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது'' என குறிப்பிட்டுள்ளார்.
@block_G@
பாராட்டு!
நாக்பூரில் நடந்த நூற்றாண்டு ஆண்டு விஜயதசமி விழாவில் பேசிய மோகன் பாகவத்தை பிரதமர் மோடி பாராட்டினார். ''மோகன் பகவத் மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் உரையாற்றினார். தேசிய முன்னேற்றம், சமூக ஒற்றுமை, தன்னம்பிக்கையின் அவசியம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து அவர் விரிவாகப் பேசினார். குறிப்பாக, ஆர்எஸ்எஸ் அமைப்பில் உள்ள ஒவ்வொருவரின் வாழ்விலும் முக்கியமாக விளங்கும் சேவை உள்ளிட்டவற்றின் மீதான அர்ப்பணிப்பை எடுத்துரைத்தார்'' என மோடி பாராாட்டியுள்ளார்.block_G
ஆர் எஸ் எஸ் இந்தியாவின் அடித்தளம்.
இதற்க்கு பாராட்டா ?
பாராட்டுதான் பரட்டை ..உனக்கு வலிக்குதா
சரிதான் ....அந்த குறிப்பிட்ட சமூகத்திற்காக பாடுபடும் அமைப்பு
RSS பாரதத்தின் முதுகெலும்பு.....
நாடு இன்று ஒற்றுமை மற்றும் வலிமையுடன் இருப்பதற்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசபக்தி, அர்ப்பணிப்பு மற்றும் கடமை உணர்வே தலையாய காரணம்.
நீங்க என்னதான் பாராட்டினாலும்.. இந்தமுறை உங்களை பிரதமராக ஆர் எஸ் எஸ் நிறுத்த போவது இல்லை
உண்மை உண்மை உண்மைமேலும்
-
இபிஎஸ்யும், திமுகவும் ஒன்று தான்; சொல்கிறார் அமைச்சர் செங்கோட்டையன்
-
தொகுதி மறுவரையறை விவகாரம்; பேச்சுவார்த்தைக்கு முன்வராத காங்கிரஸ்; கிரண் ரிஜுஜூ குற்றச்சாட்டு
-
காவலர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து முதல்வர் விஜய் மரியாதை
-
எஸ்பிஐ வங்கி மீது சைபர் தாக்குதல்; 3.900 வாடிக்கையாளர்களின் தரவுகள் கசிவு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.800, வெள்ளி கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் குறைவு
-
இந்தியாவுடனான அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதிகட்டம்; அதிபர் டிரம்ப் தகவல்