அம்மா உணவக பணியாளர்களுக்கு போனஸ் மகாத்மா காந்தி சேவை மையம் வலிறுத்தல்
பந்தலுார்: மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவுசாத் மாநில முதல்வர் விஜய்க்கு அனுப்பி உள்ள மனு:
தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு தரமான உணவு வழங்கும் பணியில் அம்மா உணவக பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் அம்மா உணவக பணியாளர்கள், குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவம் உள்ளிட்ட பிற தேவைகளுக்கு, போதிய பணம் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அனைத்து துறைகளிலும் தீபாவளி காலங்களில், முன்பணம் மற்றும் போனஸ், பண்டிகை கால பணம் என பல்வேறு வகைகளில் உதவி செய்யப்படுகிறது.
ஆனால், அம்மா உணவு பணியாளர்களுக்கு இது போன்ற உதவிகள் இல்லாத நிலையில், பண்டிகை காலங்களை கொண்டாட முடியாத சூழலில் தவித்து வருகின்றனர்.
எனவே, அம்மா உணவக பணியாளர்கள் பண்டிகையை கொண்டாடும் வகையில் போனஸ் வழங்க அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு, முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும்
-
மதுரை, கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு இன்று 'ஆரஞ்ச் அலெர்ட்'
-
1 வயது பெண் குழந்தையை ஒரு மாதமாக தேடும் போலீஸ்
-
இபிஎஸ் ஏணிகளை எட்டி உதைத்துப் பழக்கப்பட்டவராச்சே.. : அந்துமணி பதில்கள்
-
காத்திருப்போர் பட்டியலில் ஐ.பி.எஸ்., ராதிகா
-
இந்தியாவுக்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு; ஐ.நா.,வுக்கு அவர்கள் மன்றத்திலேயே பதிலடி
-
மழைநீருடன் கலந்து ஓடிய கழிவுநீரால் மக்கள் அவதி