ஆசிய பாரா விளையாட்டு சாதித்த தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு முதல்வர் விஜய் பாராட்டு

சென்னை: ஆசிய பாரா விளையாட்டு, டேபிள் டென்னிசில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.


அவரது அறிக்கை: ஜப்பானில் நடைபெற்று வரும் 5வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் பெண்கள் கிளாஸ் 9 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழக அரசு சார்பில் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். வீராங்கனை பேபி சஹானா ரவியின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

அவரது வெற்றி தமிழகத்தின் இளம் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும். அவர், எதிர்காலத்திலும் பல வெற்றிகளைப் பெற்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள். இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்.


@block_G@

உத்வேகம் அளிக்கும்!



முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், '' ஜப்பானில் நடைபெற்று வரும் 5வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஆண்கள் ஒற்றையர் கிளாஸ் 1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள வீரர் ஜெஹான் டொரப் மதனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.

அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழக அரசு சார்பில் ரூ. 30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். தமிழகத்தை சேர்ந்த இளம் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளிக்கும் வகையில் இவ்வெற்றி அமைந்துள்ளது. வீரர் ஜெஹான் டொரப் மதனுக்கு வருங்காலங்களிலும் வெற்றிகளைப் பெற்று மேலும் பல உயரங்களை எட்ட வாழ்த்துகிறேன்'' என பதிவிட்டுள்ளார்.block_G

Advertisement