டூவீலர் மீது வேன் மோதி கல்லுாரி மாணவன் பலி

குளித்தலை:திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்த வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல், 48; தேங்காய் வியாபாரி. இவரது மகன் கபில்வேல், 20. கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.டெக்., நான்காமாண்டு படித்து வந்தார்.

கடந்த, நான்கு நாட்களுக்கு முன், பிறந்தநாளுக்காக புதிய டூவீலர் வாங்க, உறவினர் ஹரிஹரன், 18, என்பவரை அழைத்துக்கொண்டு, நேற்று முன்தினம் மதியம், தோகைமலை நோக்கி சென்றார். குளித்தலை - தோகைமலை நெடுஞ்சாலை, கழுகூர் எடைமேடை அருகே சென்று கொண்டிருந்தபோது, தோகைமலையில் இருந்து கழுகூர் நோக்கி வந்த, 'டாடா ஏசி' சரக்கு வாகனம், டூவீலர் மீது மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கபில்வேல் உயிரிழந்தார். இதுகுறித்து புகார்படி, தோகைமலை போலீசார், விபத்து ஏற்படுத்திய சரக்கு வாகன டிரைவரான, மாரிபாறைபட்டியை சேர்ந்த
லட்சுமணன், 26, என்பவர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement