டைகர் ஷெராப் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை; மஹா., முதல்வர் பட்னவிஸ் திட்டவட்டம்

6

மும்பை: நடிகர் டைகர் ஷெராப் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறியதாவது: இது மிகவும் கண்டிக்கத் தக்க ஒரு விஷயம். மும்பை போலீசார் இதை மிகுந்த தீவிரத்துடன் கையாண்டுள்ளனர். அவர்களுக்குக் கிடைத்த சில தடயங்களின் அடிப்படையில் தற்போது அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். குற்றவாளிகள் குறித்து அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த நபர்கள் மிக விரைவில் கைது செய்யப்படுவார்கள். தலைமறைவாக இருந்து தொலைதூரத்தில் இருந்து உத்தரவுகளைப் பிறப்பிக்கும் குற்றவாளிகளின் பின்னணியில் இருப்பவர்களை நாங்கள் கண்டுபிடிப்போம். இந்த நபர்களில் யாரும் மஹாராஷ்டிராவிற்குள் இருந்து செயல்படவில்லை; குற்றவாளிகள் மஹாராஷ்டிராவிற்கு வெளியிலிருந்தோ அல்லது நாட்டிற்கு வெளியிலிருந்தோ கூட செயல்படுகிறார்கள்.

அவர்கள் செயல்படும் மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலமும், வெளிநாடுகளில் இருந்து செயல்படுபவர்கள் விஷயத்தில் மத்திய அரசின் உதவியைப் பெறுவதன் மூலமும், நாங்கள் அவர்களைக் கண்டுபிடிப்போம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம். இவர்கள் கோழைகள். மறைந்து இருந்து தாக்க முயற்சிக்கிறார்கள், ஆனால் அவர்களின் முயற்சிகள் முறியடிக்கப்படும். இவ்வாறு முதல்வர் பட்னவிஸ் கூறினார்.

3 பேர் கைது



ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் வைத்து 3 பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பீஹாரை சேர்ந்த ரோஷன், 22, ஹரியானாவை சேர்ந்த ரஹான், 18 மற்றும் 17 வயது சிறுவன் என போலீசார் தெரிவித்தனர்.

Advertisement