தொடர் மழையால் வன விலங்குகள் தாகத்திற்கு தீர்வு
போடி:
போடி பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வன விலங்குகள் தாகத்திற்கு தீர்வு கிடைத்துள்ளதால் வனத்துறையினர் நிம்மதி அடைந்து உள்ளனர்.
போடி, குரங்கணி, கொட்டகுடி போடி மெட்டு, அத்தியூத்து, வலசத்துறை, பிச்சாங்கரை, மேலப்பரவு, மேல் மரக்கா மலைபகுதி உட்பட பல்வேறு பகுதியில் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வனப்பகுதி அமைந்து உள்ளது. கடந்த பல மாதங் களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால் வனபகுதியில் நீர்வரத்து இன்நி வறண்டு காணப்பட்டது. ஆறுகளிலும் நீர்வரத்து இல்லாத நிலையில் வன விலங்குகள் மலை அடிவார பகுதிக்கு வரத்துவங்கின. சில இடங்களில் பயிர்களையும் சேதப்படுத்தின.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக போடி, குரங்கணி, கொட்டகுடி, வடக்குமலை உள்ளிட்ட பகுதியில் பெய்து வரும் மழையால் ஆற்றுப் பகுதிகளில் நீர்வரத்து துவங்கி உள்ளது. இதனால் வனப் பகுதியில் உள்ள சுனைகளில் நீர் தேங்கி, வனப்பகுதி பசுமையாக மாறி உள்ளன. வனவிலங்குகளின் தாகத்திற்கும் தீர்வு கிடைத்துள்ளதால் வனத்துறையினர் நிம்மதி அடைந்து உள்ளனர்.
மேலும்
-
சாட்டையால் அடித்து 'பேய் விரட்டும்' விநோத நிகழ்வு
-
ஆசிய பாரா விளையாட்டு; இந்தியாவுக்கு குண்டு எறிதலில் தங்கம்... வில்வித்தையில் வெள்ளி
-
காவல்துறை சமூகத்தின் பாதுகாப்பு அரண்; சொல்கிறார் ஸ்டாலின்
-
'காலைக்கதிர்' அரிச்சுவடி ஆரம்பம் கோலாகலம் 'அ, ஆ' எழுதிய மழலையரால் பெற்றோர் நெகிழ்ச்சி
-
உக்ரைன் காலை வாரினார் எலான் மஸ்க்: ஸ்டார்லிங்க் இணையச் சேவை வேகம் குறைப்பு
-
பயங்கரவாதத்திற்கு எதிராக சகிப்புத்தன்மை கூடாது; அமெரிக்காவுக்கு ஜெய்சங்கர் வலியுறுத்தல்