சிறுவர்கள் ஓட்டும் டூவீலர்களால் அதிகரிக்கும் விபத்துகள்: கண்டு கொள்ளாத போலீசார்
கூடலுார்: கூடலுாரில் சிறுவர்கள் டூவீலர்கள் ஓட்டுவதால் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. இதனை போலீசாரும் கண்டு கொள்ளாததால் பொதுமக்கள், பிற வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.
கூடலுாரில் சாலை விதிமுறைகளை மீறி ஏராளமான சிறுவர்கள் டூவீலர்களை ஓட்டுவது அதிகரித்துள்ளது. காலை, மாலை நேரங்களில் மெயின் பஜார், எல்.எப்., ரோடு, ரதவீதி உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் சிறுவர்கள் அதிவேகமாக டூவீலரை ஓட்டி செல்கின்றனர். இதனால் விபத்துக்கள் தொடர்கிறது. சிறுவர்கள் டூவீலர் ஓட்டினால் பெற்றோர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற போலீசாரின் எச்சரிக்கையும், நடவடிக்கையும் கானல் நீராக உள்ளது.
சிறுவர்கள் டூவீலர்கள் ஓட்டுவதை தடுக்க சட்டம் கடுமையாக்கவில்லை என போலீசார் ஒதுங்கி கொள்கின்றனர்.
பள்ளி செல்ல மாணவர்களுக்கு டூவீலர் வழங்குவதை பெற்றோர் தவிர்க்க வேண்டும். டூவீலர்கள் ஓட்டும் சிறுவர்கள்,பள்ளி மாணவர்களின் பெற்றோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
சாட்டையால் அடித்து 'பேய் விரட்டும்' விநோத நிகழ்வு
-
ஆசிய பாரா விளையாட்டு; இந்தியாவுக்கு குண்டு எறிதலில் தங்கம்... வில்வித்தையில் வெள்ளி
-
காவல்துறை சமூகத்தின் பாதுகாப்பு அரண்; சொல்கிறார் ஸ்டாலின்
-
'காலைக்கதிர்' அரிச்சுவடி ஆரம்பம் கோலாகலம் 'அ, ஆ' எழுதிய மழலையரால் பெற்றோர் நெகிழ்ச்சி
-
உக்ரைன் காலை வாரினார் எலான் மஸ்க்: ஸ்டார்லிங்க் இணையச் சேவை வேகம் குறைப்பு
-
பயங்கரவாதத்திற்கு எதிராக சகிப்புத்தன்மை கூடாது; அமெரிக்காவுக்கு ஜெய்சங்கர் வலியுறுத்தல்