வேன் கவிழ்ந்து விபத்து: குழந்தைகள் உட்பட 17 பேர் காயம்
விருதுநகர்: விருதுநகர் அருகே ஓ.கோவில்பட்டி ரோட்டில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உள்பட 17 பேர் காயமடைந்தனர்.
விருதுநகர் அருகே இனாம்ரெட்டியபட்டியில் இருந்து ராஜபாளையம் வேதநாயகபுரத்தில் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேர் நேற்று காலை வேனில் சென்றனர்.
அப்போது காலை 8:30 மணிக்கு ஓ.கோவில்பட்டி ரோட்டில் சென்ற போது சகதியில் சிக்கி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வேனில் இருந்த பஞ்சவர்ணம் 50, தினகரன் 32, சங்கீதா 26, இன்னாசியம்மாள் 71, மூக்கம்மாள் 71, ஆரோன் 1, கெபின் 9, பாண்டீஸ்வரி 50, செல்வகுமாரி 49, தமிழரசி 34, பியூலின் கெபி 12, ஆகியோர் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் பிரியதர்ஷனி 25, இம்மானுவேல் 52, ஏஞ்சல் 27, கோகிலா 39, கயல்விழி 17, நகோமி 46, ஆகியோர் லேசான காயமடைந்து சிகிச்சை பெற்றனர். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
சாட்டையால் அடித்து 'பேய் விரட்டும்' விநோத நிகழ்வு
-
ஆசிய பாரா விளையாட்டு; இந்தியாவுக்கு குண்டு எறிதலில் தங்கம்... வில்வித்தையில் வெள்ளி
-
காவல்துறை சமூகத்தின் பாதுகாப்பு அரண்; சொல்கிறார் ஸ்டாலின்
-
'காலைக்கதிர்' அரிச்சுவடி ஆரம்பம் கோலாகலம் 'அ, ஆ' எழுதிய மழலையரால் பெற்றோர் நெகிழ்ச்சி
-
உக்ரைன் காலை வாரினார் எலான் மஸ்க்: ஸ்டார்லிங்க் இணையச் சேவை வேகம் குறைப்பு
-
பயங்கரவாதத்திற்கு எதிராக சகிப்புத்தன்மை கூடாது; அமெரிக்காவுக்கு ஜெய்சங்கர் வலியுறுத்தல்